Categories: சினிமா

கதை பிடிக்காததால் நடிக்க மறுத்த விஜயகாந்த்.. நண்பனின் வற்புறுத்தலால் நடித்து சூப்பர் ஹிட்டான படம்..

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றும் கேப்டன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரது வாழ்க்கையில் ஒருவரின் நட்பு இன்றியமையாததாக இருந்துள்ளது. அதாவது கேப்டனின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியில் இப்ராஹிம் ராவுத்தர் முக்கிய பங்கு வகித்தார்.விஜயகாந்துக்கு மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க தொடங்கியதும் அவர் நடிக்கும் திரைப்படங்களை முடிவு செய்யும் நபராக ராவுத்தர் மாறினார்.

அவர் கதையைக் கேட்டு அது விஜயகாந்திற்கு ஏற்ற திரைப்படமா என முடிவு செய்வார். எந்த ஒரு இடத்திலும் விஜயகாந்த் அவரின் பேச்சை தட்டவே மாட்டார். விஜயகாந்தின் சினிமா கேரியரை வடிவமைத்து மொத்தமாக இயக்கியவர் இவர்தான். தன் நண்பனின் பேச்சை தட்ட கூடாத என்பதற்காக விருப்பமே இல்லை என்றாலும் ராவுத்தர் சொன்ன வார்த்தைக்காக விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ஏராளம்.  ஒரு கட்டத்தில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான புலன் விசாரணை திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் விஜயகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால் அவர் சிறந்த இயக்குனர் என்று கூறி விஜயகாந்தை ராவுத்தர் அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார். படப்பிடிப்பில் கூட இயக்குனர் மற்றும் விஜயகாந்த் இடையே பல முரண்போக்குகள் ஏற்பட படப்பிடிப்புகள் கூட சில சமயத்தில் ரத்து செய்யப்பட்டது. இயக்குனரும் ராவுத்தரை அணுகி ஏன் இவர் இப்படி செய்கிறார் என கோபமாக பேசிய நிலையில் அதன் பிறகு ராவுத்தர் இந்த படத்தில் நீ நடித்து தான் ஆக வேண்டும் என விஜயகாந்த்திடம் கோபமாக கூற புலன் விசாரணை திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்து முடித்தார். ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த்க்கு இந்த திரைப்படம் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

Nanthini

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

16 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

24 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

30 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

42 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

59 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago