#image_title
தமிழ் சினிமாவில் விஜி என ஆரம்பித்த அழைக்கப்பட்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் புரட்சிக்கலைஞர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆனார். அதன்பிறகு தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என பெயரிட்ட நிலையில், அந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில்தான் வீரபத்ரன் என்ற வீரப்பன் கேரக்டரில் நடிகர் மன்சூர் அலிகானின் தமிழ் சினிமா பயணமும் துவங்கியது. கேப்டன் பிரபாகரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் என அழைக்கப்பட்டார். தேமுதிக கட்சியை துவங்கிய பிறகு, அவரது பெயரையே தொண்டர்கள் சொல்லாமல், கேப்டன் என்ற பெயரே விஜயகாந்துக்கு நிலைத்து விட்டது. இதில் பிரபாகரன் என்ற பெயர் அவருக்கு மிக பிடித்துப்போக காரணம், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை விஜயகாந்துக்கு மிகவும் பிடிக்கும் என்ற காரணம்தான்.
இதுகுறித்து இப்போது டாக்டர் காந்தராஜன் வெளிப்படையாக கூறியிருக்கிறார் தமிழ் சினிமாவில் சில படங்களில் காந்தராஜன் நடித்திருக்கிறார். சினிமா பிரபலங்கள் சார்ந்த முக்கிய தகவல்களை சமூக ஊடகங்களில் பரிமாறி வருகிறார். சமீபத்திய ஒரு நேர்காணலில் அவர் நடிகர் விஜயகாந்த் பற்றி கூறியதாவது, நடிகர் விஜயகாந்த் அவருக்கு பிடித்தமான படங்களில் மட்டுமே நடித்தார். யாருடைய வற்புறுத்தலிலும் அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் சொன்ன படங்களிலும் நடித்தார். ஆனால் அவர் விஜயகாந்துக்கு சரியான படங்களை, கதைகளை தான் மிக கவனமாக தேர்வு செய்வார்.
விஜயகாந்த், ராவுத்தர் போன்றவர்களை விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவரது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வைத்தார். அவரது மகனுக்கும் பிரபாகரன் என பெயர் வைத்தார். அந்த காலகட்டத்தில் விஜயகாந்த், பிரபாகரனை நேரில் சென்று சந்தித்து வந்தது எல்லாம் உண்மைதான். அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யாரிடமும் அதை காட்டி காசாக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ஒரு தரப்பினர் பிரபாகரனை சந்தித்துவிட்டு காசாக்கி கொண்டனர். அது விஜயகாந்துக்கு அவசியமானதாக இருக்கவில்லை என்று கூறியிருக்கிறார் காந்தராஜன்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…