#image_title
இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு, உதயநிதியுடன் ஒரு காதல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்தார்.
இவ்வாறு அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் பணியாற்றிய ஹன்சிகா குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் பார்ப்பதற்கு இளம் வயது குஷ்பு போன்றே இருந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்தனர். பின்னர் உடல் எடை கூடியதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கியது.
இதன் பின்னர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
இத்திருமணத்தில் நெருக்கமானவர்களும், குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியானது . தற்பொழுது மீண்டும் படவாய்ப்புக்காக வேண்டி தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ நம்ம OK OK மீரா-வா இது..?’ என்று ஷாக்கில் உள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…