Categories: சினிமா

விஜய் – விஜயகாந்த்துக்கு இடையே இருக்கும் சர்ச்சைக்கு fullstop வைத்த தளபதி.. ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி..

Spread the love

விஜயகாந்த் குடும்பத்திற்கும், நடிகர் சண்முக பாண்டியனுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் ஒரு விஷயத்தை கூறி இருக்கின்றார். இது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றார் நடிகர் விஜய். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிப்பில் முன்னேறுவதற்கு பல கஷ்டங்களை பட்டிருந்தார் .

எஸ்ஏ சந்திரசேகரின் மகன் என்பதால் சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து விட்டாலும் அடுத்தடுத்து சினிமாவில் முன்னேறி வருவதற்கு பல கஷ்டங்களை சந்தித்திருந்தார். அப்படி அவர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் கை கொடுத்து தூக்கி விட்ட ஒரு நடிகர் என்றால் விஜயகாந்த் தான்.  நடிகர் விஜய் நடித்த செந்தூரப் பாண்டியன் படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

அந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்திருந்தார். அப்பிடத்திற்கு பிறகு தான் விஜயின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தது. அந்த சமயத்தில் விஜயகாந்த் ஒரு உச்சத்தில் இருந்த நடிகர். அவரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தால் விஜயின் கேரியர் நன்றாக இருக்கும் என்று எண்ணிய எஸ்ஏ சந்திரசேகர் விஜயையும் விஜயகாந்தையும் வைத்து இப்படத்தை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து விஜயகாந்த் அரசியலில் கால் பதித்து அதிலும் சிறந்து விளங்கினார். பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஒருமுறை கூட விஜய் சென்று பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தாரிடம் தொலைபேசியில் அழைத்து கூட ஆறுதல் கூறவில்லை என்று கூறப்பட்டது.

மேலும் அவர் இறப்பிற்கு மட்டும் விஜய் வந்து சென்றார். இதனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜய் மீது சற்று கோபத்தில் இருந்தார். ஆனால் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை கேமியோ ரோலில் ஏஐ டெக்னாலஜியை வைத்து நடிக்க வைத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தையும் அவரது குடும்பத்தாரிடம் போட்டுக் காட்டப்பட்டது.

அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். இந்நிலையில் பலரும் விஜய் காந்தியின் மகன் சண்முக பாண்டியனுக்கு விஜய் ஏதாவது ஒரு உதவி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பல விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றார். அதாவது சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது .

இந்த திரைப்படத்தின் டீசரை விஜய்யின் சமூக வலைதள அக்கவுண்டில் விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று விஜயகாந்தின் குடும்பத்தினர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய் ஏன் அப்படி செய்ய வேண்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று கூறுங்கள் நான் நேரடியாக வந்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறாராம். இதை கேட்டதும் விஜயகாந்த் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“பெங்களூரு பங்களாவில் பயங்கரம்!… நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தொழிலதிபர் செய்த வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பின்னணி”…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…

4 minutes ago

குஷியோ குஷி..! பெண்களுக்கு மாதம் ரூ.2500.. வெளியானது புதிய அப்டேட்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு…

8 minutes ago

“இன்றே பதவியேற்க வேண்டும்”.. தவெக MLA-களுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

10 minutes ago

பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…

17 minutes ago

2026-ல் பெரிய மாற்றம் இருக்கு..! மொத்த சிஸ்டத்தையும் க்ளீன் பண்ணுவோம்.. அண்ணாமலை விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழக அரசியல் சூழல்…

19 minutes ago

அதிமுகவில் பிளவு… இபிஎஸ் தலையில் இறங்கிய இடி… சற்றுமுன் பரபரப்பை கிளப்பிய EX அமைச்சர்…!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும்…

33 minutes ago