விஜயகாந்த் குடும்பத்திற்கும், நடிகர் சண்முக பாண்டியனுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் ஒரு விஷயத்தை கூறி இருக்கின்றார். இது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றார் நடிகர் விஜய். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிப்பில் முன்னேறுவதற்கு பல கஷ்டங்களை பட்டிருந்தார் .
எஸ்ஏ சந்திரசேகரின் மகன் என்பதால் சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து விட்டாலும் அடுத்தடுத்து சினிமாவில் முன்னேறி வருவதற்கு பல கஷ்டங்களை சந்தித்திருந்தார். அப்படி அவர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் கை கொடுத்து தூக்கி விட்ட ஒரு நடிகர் என்றால் விஜயகாந்த் தான். நடிகர் விஜய் நடித்த செந்தூரப் பாண்டியன் படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.
அந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்திருந்தார். அப்பிடத்திற்கு பிறகு தான் விஜயின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தது. அந்த சமயத்தில் விஜயகாந்த் ஒரு உச்சத்தில் இருந்த நடிகர். அவரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தால் விஜயின் கேரியர் நன்றாக இருக்கும் என்று எண்ணிய எஸ்ஏ சந்திரசேகர் விஜயையும் விஜயகாந்தையும் வைத்து இப்படத்தை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து விஜயகாந்த் அரசியலில் கால் பதித்து அதிலும் சிறந்து விளங்கினார். பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஒருமுறை கூட விஜய் சென்று பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தாரிடம் தொலைபேசியில் அழைத்து கூட ஆறுதல் கூறவில்லை என்று கூறப்பட்டது.
மேலும் அவர் இறப்பிற்கு மட்டும் விஜய் வந்து சென்றார். இதனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜய் மீது சற்று கோபத்தில் இருந்தார். ஆனால் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை கேமியோ ரோலில் ஏஐ டெக்னாலஜியை வைத்து நடிக்க வைத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தையும் அவரது குடும்பத்தாரிடம் போட்டுக் காட்டப்பட்டது.
அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். இந்நிலையில் பலரும் விஜய் காந்தியின் மகன் சண்முக பாண்டியனுக்கு விஜய் ஏதாவது ஒரு உதவி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பல விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றார். அதாவது சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது .
இந்த திரைப்படத்தின் டீசரை விஜய்யின் சமூக வலைதள அக்கவுண்டில் விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று விஜயகாந்தின் குடும்பத்தினர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய் ஏன் அப்படி செய்ய வேண்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று கூறுங்கள் நான் நேரடியாக வந்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறாராம். இதை கேட்டதும் விஜயகாந்த் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.