Connect with us
Vadivelu

CINEMA

காரை பார்க்கிங் செய்வதில் வந்த தகராறு – விஜயகாந்த், வடிவேலு சண்டையின் பின்னணி இதுதானா?

நடிகர் வடிவேலு வளர்ந்து வரும் அறிமுக நடிகராக இருந்த காலகட்டத்திலேயே சின்னக்கவுண்டர் போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார் விஜயகாந்த். பெரிய நடிகராக இருந்தாலும், துணை நடிகர்களை, அறிமுக நடிகர்களை மரியாதையாக நடத்தி, தனது படங்களில் வாய்ப்பு கொடுக்கும் பண்பு கொண்டவர் விஜயகாந்த். சின்னக்கவுண்டர் படத்தில், விஜயகாந்துடன் குடை பிடித்து கொண்டு வரும் மாகாளி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் மண்ணாங்கட்டி சுப்ரமணியம்.

   

பாக்யராஜ் படங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக எங்க சின்ன ராசா படத்தில் பாக்யராஜூடன் பண்ணையாளாக மண்ணாங்கட்டி சுப்ரமணியம் நடித்திருந்தார். அவர் பாக்யராஜ் படங்களில் பிஸியாக இருந்ததால், சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால், அந்த கேரக்டரில் நடித்தவர்தான் வடிவேலு. பிறகு தவசி படத்திலும் நடித்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்த், வடிவேலு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆனால் எந்த இடத்திலும் விஜயகாந்த், வடிவேலு குறித்து தவறாக பேசியது இல்லை. ஆனால் பல இடங்களில், பல மேடைகளில் விஜயகாந்தை தரம்தாழ்த்தி பேசியவர் வடிவேலுதான்.

இவர்களின் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமே, கார் பார்க்கிங்தான். இதுகுறித்து வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் சுப்புராஜ்   ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜயகாந்த் வீடு உள்ள வீதியில்தான் வடிவேலு அலுவலகம் இருந்துள்ளது. அப்போது இரவில் காரில் வடிவேலு தன் சக நடிகர்களுடன் அலுவலகம் வந்துள்ளார். அப்போது அவரது அலுவலகம் முன்பு, வீதி முழுவதும் கார்களாக நின்றுள்ளது. அப்போது ஏன் இப்படி வீதி முழுக்க கார் நிறுத்தப்பட்டுள்ளது என கேட்டதற்கு, விஜயகாந்தின் அக்கா கணவர் இறந்துவிட்டார் என கூறியதால், வடிவேலு சரி போகலாம். காலையில் சென்று துக்கம் விசாரிக்கலாம் என்று கூறிவிட்டார். அதன்பின்பு அங்கு வந்த சிலர், வடிவேலு என்ன விசாரிச்சான் எனக் கேட்டு தகராறு செய்து, வடிவேலு அலுவலகத்துக்குள் நுழைந்து எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கி விட்டனர், என்று கூறியிருக்கிறார் அந்த துணை நடிகர் சுப்புராஜ் .

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top