Connect with us

CINEMA

முதல் பட அட்வான்ஸை வாங்கிக்கொண்டு திருப்பதிக்குப் போன தேங்காய் சீனிவாசன்… வந்து பாத்தா ஷூட்டிங்கில் மிகப்பெரிய டிவிஸ்ட்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. எம் ஆர் ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு என மிகப்பெரிய பாரம்பரியமே உள்ளது.

இவர்களில் ஒருவராக மிகக்குறுகிய காலமே படங்களில் நடித்து மறைந்தவர்தான் தேங்காய் சீனிவாசன். மேடை நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சீனிவாசன். ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக பட்டைய கிளப்ப அதுவே அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. அப்படி பிரபல நடிகராக இருந்த போது ஒரு விரல் என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது.

   

அந்த படத்தில் அவரது வேடம் க்ளிக் ஆகவே நகைச்சுவை ரூட்டைப் பிடித்துக்கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல படங்களில் நெகட்டிவ் வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி இருக்கிறார். இவரது நடிப்பின் உச்சம் என்றால் காசேதான் கடவுளடா மற்றும் ரஜினிகாந்தோடு அவர் நடித்த தில்லு முல்லு படத்தை சொல்லலாம்.

தில்லுமுல்லு படத்தில் தேசிய வாதியாக கண்டிப்பான முதலாளியாக நடந்துகொள்ளும் அவரை ரஜினி எப்படி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார், அதைத் தெரிந்துகொண்டு அவர் எடுக்கும் முடிவு என படத்தில் ரஜினிக்கு இணையான வேடத்தில் நடித்திருப்பார்.

தேங்காய் சீனிவாசன் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர். தனக்கு முதல் முதலாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்துக்காக வாங்கிய முன்பணம் 301 ரூபாயோடு திருப்பதி போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார். வந்து பார்த்தால் அவர் ஒப்பந்தம் ஆன படத்தில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தாராம். ஏனென்றால் அப்போது நாகேஷ்தான் வியாபார மதிப்புக் கொண்ட ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தார் என்பதுதான் காரணமாம். ஆனாலும் விடாமல் முயற்சி செய்து ஒரு விரல் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் தேங்காய் சீனிவாசன்.

Continue Reading

More in CINEMA

To Top