#image_title
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். புயலின் தாக்கத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வீடு, சாப்பாடு, ஆடை, கரெண்ட் என எதுவும் இல்லாமல் தவிக்க அரசும், தனியார் நிறுவனங்களும், பிரபலங்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இன்னமும் புயலின் தாக்கம் நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும். புயல் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்தவுடனே சூர்யா மற்றும் கார்த்தி ரூ. 10 லட்சம், நடிகர் விஷ்ணு ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் என வெள்ள நிவாரண நிதி கொடுத்தனர்.
இந்த நிலையில் நடிகர் சூரியும் தனது சார்பிலும் தான் நடத்தி வரும் மதுரை அம்மன் உணவகம் சார்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். ஹீரோவாக இல்லாமல் தொழிலதிபராக நடிகர் சூரி செய்த இந்த உதவியை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…