#image_title
80’ஸ் , 90’ஸ் கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவிற்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.
2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் கணவர் குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் லெஜண்ட் சரவணன் , நடிகர் விஷால், பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ திருமண வீடியோ…
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…