பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகர் பிரபு மகளின் திருமணம்.. நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய லெஜெண்ட் சரவணன்…

By Begam

Published on:

80’ஸ் , 90’ஸ் கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவிற்கு  விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் கணவர் குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா,  பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் லெஜண்ட் சரவணன் , நடிகர் விஷால், பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.  தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ திருமண வீடியோ…