கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படம் இப்போது உருவாகி வருகிறது. ஜெயிலர் 2ம் பாகத்திலும் மோகன்லால் சிவராஜ்குமார் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படம் குறித்து கூறியதாவது, ஜெயிலர் முதல் பாகத்தை விட 2வது பாகத்தில் என்னுடைய கேரக்டர் நீளம் அதிகமாக இருக்கும். இந்த படத்தில் நடிக்க மொத்தம் 4 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் ஒரு நாள் மட்டுமே நடித்துள்ளேன்.
இன்னும் 3 நாட்களுக்கான படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் நடக்க உள்ளது. கன்னடம் தமிழ் சினிமாவுக்கு இடையே நல்ல ஒரு நட்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கெஸ்ட் ரோல்களில் நான் தொடர்ந்து நடிக்கிறேன் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…