மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில், தூக்கத்தில் துணியிலேயே மலம் கழித்ததற்காக மூன்று வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஷாநாஸ் என்பவர் தனது கணவரைப் பிரிந்து, அக்பர் ரசாக் என்பவருடன் சோலாப்பூரில் வசித்து வந்தார்.
கடந்த டிசம்பர் 11 அன்று மதுபோதையில் இருந்த ரசாக், சிறுவன் உறக்கத்தில் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்து அவனது கழுத்தை நெரித்துத் தாக்கியதில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம் குழந்தை கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடிய ரசாக், மருத்துவமனைக்குச் செல்லும்போது போலீசிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அவர்களைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டுத் தப்பியோடினான்.
பின்னர் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சோலாப்பூர் காவல்துறையினர், கர்நாடகாவிற்குத் தப்பிச் சென்ற கொலையாளி ரசாக்கை தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…