பிரித்விராஜ் மூத்த நடிகர்கள் சுகுமாரன் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகனாவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்தியாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ். 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரித்வராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
2006 ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்களின் மகளான சரண்யா பாக்யராஜ் உடன் இணைந்து பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரித்திவிராஜ். சரண்யா பாக்யராஜ் நடித்த முதலும் கடைசிமான திரைப்படம் பாரிஜாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுகளை பெற்றார் பிரித்விராஜ்.
இந்நிலையில் பிரித்விராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழில் நான் நடித்த படங்களில் திரும்பிப் பார்க்க விரும்பும் படமாக மொழி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் ஒரு மாடர்ன் கிளாசிக். இந்த படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜ் தான். அதேசமயம் இந்த திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் தான் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் மாதிரி நெருக்கமாகி விட்டோம். அதன்பிறகு இருவரும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம்.
நான் தயாரித்த “9” படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கான சம்பளம் என்ன என்று கேட்டபோது படம் முடியட்டும் என்று சொல்லி படம் முழுவதும் நடித்தார். இறுதியாக டப்பிங் பேசும்போது கூட இப்போவாது சம்பளம் என்னன்னு சொல்லுங்க என்று கேட்டப்போ அவர் சொல்லவில்லை. பிறகு ஒரு கட்டத்தில் அவர் கிட்ட நான் செக் கொடுத்தேன். உடனே என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்பா என்று சொல்லி அதாவது தூக்கி போட்டுட்டாரு. என்னை எப்போதுமே அவர் வேறு ஒருவராக பார்த்தது கிடையாது என பிரித்விராஜ் பிரகாஷ்ராஜ் குறித்து பேசி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…
கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…