நான் கொடுத்த செக்கை பிரகாஷ்ராஜ் தூக்கி எறிஞ்சிட்டார்.. ஒத்த ரூபா கூட வாங்கல.. பிரித்விராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on பங்குனி 24, 2025

Spread the love

பிரித்விராஜ் மூத்த நடிகர்கள் சுகுமாரன் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகனாவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்தியாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ். 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரித்வராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

Prithviraj Sukumaran reveals not getting exciting scripts in Hindi before  Bade Miyan Chote Miyan – 'Now there is nothing aspirational per say about  doing a Hindi film...' | Exclusive

   

2006 ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்களின் மகளான சரண்யா பாக்யராஜ் உடன் இணைந்து பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரித்திவிராஜ். சரண்யா பாக்யராஜ் நடித்த முதலும் கடைசிமான திரைப்படம் பாரிஜாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுகளை பெற்றார் பிரித்விராஜ்.

   

Prithviraj Sukumaran Tests Positive For COVID-19 | Prithviraj Sukumaran  Tests Positive For Coronavirus - Filmibeat

 
தொடர்ந்து சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன் சமீபத்தில் ஆடிஜிவிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். தென்னிந்தியாவில் மிகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ். தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார் பிரித்திவிராஜ். தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் நடித்து இருக்கும் இந்த படம் லூசிபர் படத்தின் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
rediff.com: Prithviraj on Mozhi and Prakash Raj

இந்நிலையில் பிரித்விராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழில் நான் நடித்த படங்களில் திரும்பிப் பார்க்க விரும்பும் படமாக மொழி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் ஒரு மாடர்ன் கிளாசிக். இந்த படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜ் தான். அதேசமயம் இந்த திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் தான் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் மாதிரி நெருக்கமாகி விட்டோம். அதன்பிறகு இருவரும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம்.

9 (Nine) - Promo | Prithviraj Sukumaran, Mamta, Wamiqa | 07 Feb 2019

நான் தயாரித்த “9” படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கான சம்பளம் என்ன என்று கேட்டபோது படம் முடியட்டும் என்று சொல்லி படம் முழுவதும் நடித்தார். இறுதியாக டப்பிங் பேசும்போது கூட இப்போவாது சம்பளம் என்னன்னு சொல்லுங்க என்று கேட்டப்போ அவர் சொல்லவில்லை. பிறகு ஒரு கட்டத்தில் அவர் கிட்ட நான் செக் கொடுத்தேன். உடனே என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்பா என்று சொல்லி அதாவது தூக்கி போட்டுட்டாரு. என்னை எப்போதுமே அவர் வேறு ஒருவராக பார்த்தது கிடையாது என பிரித்விராஜ் பிரகாஷ்ராஜ் குறித்து பேசி உள்ளார்.