தனியா ஒத்த பொம்பளையா போராடுற.. நீதி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான்.. திடீரென போராட்டத்தில் இறங்கிய நடிகை சோனா.!

By Nanthini on பங்குனி 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.  இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பல சவால்களை சந்தித்து வருகின்றார்.

actress-sona-on-hunger-strike-at-fefsi-office

   

சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளை அதற்கு சான்றாக இருந்தது. பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக வந்தாலும் அதற்கு அடுத்து கவர்ச்சி வேடங்களிலேயே நடித்தார். பிறகு அதே போன்ற கதாபாத்திரங்கள் தனக்கு வருவதால் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார். சோனாவின் பெயருக்கு பின்னால் சர்ச்சைகளும் சொல்ல முடியாத பல ரகசியங்களும் உள்ளது. இப்படியான நிலையில் நடிகை சோனா இயக்கி நடித்துள்ள ஸ்மோக் வெப் தொடர் விரைவில் வெளியாகும் என்று அவரை தெரிவித்திருந்தார். அதில் தான் மலையாள சினிமாவில் நடித்த போது ஒரு நடிகர் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிய விஷயத்தையும் பகிர்ந்திருந்தார். இப்படியான நிலையில் ஸ்மோக் வெப் தொடர் வெளியாவதில் பெரும் சிக்கல் பிடித்திருக்கிறது.

   

Sona,சின்னத்திரைக்கு வரும் கவர்ச்சி நடிகை சோனா! என்ன டிவி தெரியுமா? -  actress sona enters small screen to act in colors tamil serial - Samayam  Tamil

 

வெப் தொடரில் பணியாற்றிய மேனேஜர் சங்கர் என்பவர் பணத்தைப் பெற்று ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெப்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் சோனா ஒரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், நான் 25 வருடங்களாக இந்த சினிமா இண்டஸ்ட்ரியல் இருக்கின்றேன். எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை தான் வருகிறது. கடந்த பத்து வருடங்களாக என்னை வேலை பார்க்கவே விடுவது கிடையாது. ஒருமுறை வாயைத் திறந்து ஒருத்தன் கையை வச்சிட்டான் என்று சொன்னதுக்கே கம்முனு உட்கார வச்சுட்டாங்க. நாம பேசினா இப்படித்தான் உட்கார வைப்பாங்க என்று தெரியும். நானும் மலையாளத்தில் படம் செய்து நாம் பாட்டுக்கு என்னுடைய வேலையை பார்த்துட்டு இருக்கேன்.

அந்த நடிகர் என் காலை பிடித்து கெஞ்சினாரு.. 6 நடிகைகள் சொன்ன விஷயம்.. ஆடி  போயிட்டேன்! நடிகை சோனா ஓபன் | Actress Sona's Smoke Web Series Set for  Release – Shares Shocking ...

நானும் ஸ்மோக் வெப் தொடரில் பல பிரச்சனைகளை தாண்டி பிராஜெக்ட் முடித்தேன். வெப் தொடர் பாதியில் ஒரு மேனேஜரை வைத்திருந்தோம். அவர் ஏற்கனவே இரண்டு படத்துல வேலை செஞ்சதால நல்லவர் என்று நினைத்து நம்பிக்கையாய் இருப்பார் என்று வேலையை கொடுத்தோம். அவரும் நான்கு நாள் சம்பளத்தை கொடுக்காமல் என்கிட்ட இருந்து பணத்தை வாங்கி ஏமாத்திட்டு கேமராமேன் டிபார்ட்மெண்டிடம் ஹார்ட் டிஸ்க் கொடுத்துட்டு போயிட்டான். நானும் இது தொடர்பாக புகார் அளித்தேன்.

மேலாளர் என்னை ஏமாத்திட்டாரு.. நடிகை சோனா திடீர் போராட்டம்!

ப்ரொடியூசர் கவுன்சிலிலும் புகார் கொடுத்துட்டு பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்திட்டு வெப் தொடரை முடிச்சுட்டேன். ஆனால் ப்ரோமோஷன் பணியில் தீவிரமா இருக்கப்போ ஹார்ட் டிஸ்க் ஒன்னு இருக்கு அதை கொடுக்க மாட்டார்கள். நானும் தனி பொம்பளையா தான் போராடிக் கொண்டிருக்கிறேன். இதுக்கு மேல என்னால முடியாது நான் செத்து தான் போகணும். சாகுற வரைக்கும் விடமாட்டேன் எனக்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும் என சோனா கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.