தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமா அளவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ள ராஷ்மிகா இறுதியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பும் நடனமும் ரசிகர்களை கட்டி போட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள திரைப்படம் தான் சாவா. பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் நடிப்பில் வரலாற்று பின்னணி கொண்ட எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா மற்றும் அஷுதோஷ் ராணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மராத்திய நாவலை தழுவி வீரம் மற்றும் துணிச்சலின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டனர் இதனிடையே இப்படத்தில் 59 வயதாகும் சல்மான் கானுக்கு ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ளார்.
மூத்த நடிகரான சல்மான் கானுக்கு ரஷ்மிகா ஜோடியாக நடித்துள்ளது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான் கான், ஹீரோயினிக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் உள்ளதாக பேசுகிறார்கள். வயது வித்தியாசத்தால் ஹீரோயினிக்கு பிரச்சனை இல்லை அவருடைய அப்பாவுக்கும் பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை. ராஷ்மிகாவுக்கு திருமணம் ஆகி மகள் பிறந்தால் அவருடனும் சேர்ந்து நடிப்பேன் என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.