உல்லாசப் பயணம்.. நள்ளிரவில் ரூமுக்குள் நுழைந்த பெண்…. கோவா சொகுசு லாட்ஜில் தொழிலதிபருக்கு நேர்ந்த பயங்கரம்… அம்பலமான பகீர் உண்மை….!

Spread the love

கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்ற அவர், அங்குள்ள கலங்குட் பகுதியில் உள்ள ஒரு சொகுசு லாட்ஜில் தங்கியிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது அறையில் அவர் திடீரென மயங்கிக் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் இது சாதாரண மாரடைப்பு மரணம் என்றுதான் கருதப்பட்டது.

ஆனால், சந்தீப் சாலியன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் இருந்த தங்கக் காப்பு ஆகியவை மாயமாகியிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனால் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, லாட்ஜில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சந்தீப் சாலியனுடன் ஒரு பெண் லாட்ஜ் அறைக்குள் நுழைவதும், நள்ளிரவில் அந்தப் பெண் மட்டும் தனியாக அறையை விட்டு வெளியேறிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து சைபர் பிரிவு போலீசாரின் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் செல்போன் எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷதா (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கர்நாடக போலீசாரின் உதவியுடன் கோவா போலீசார் அக்‌ஷதாவை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய மும்முரமான விசாரணையில், அவர் பல பெயர்களில் தனது அடையாளங்களை மாற்றி, பணக்காரர்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது வெளிவந்தது. கோவாவில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு (Casino) வரும் வசதியான தொழிலதிபர்களுடன் பழகி, அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதை அக்‌ஷதா வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கு அவர்களுக்கு பாலியல் ஆசை காட்டி, அவர்கள் குடிக்கும் குளிர்பானங்களில் அதிக அளவு மயக்க மருந்தை கலந்து கொடுத்து, அவர்கள் மயங்கியவுடன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து எஸ்கேப் ஆகிவிடுவது அவரது பாணியாகும்.

இதுகுறித்து கோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி அமோன்கர் கூறும்போது, “அக்ஷதா இதற்கு முன்பும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு இதேபோல் மயக்க மருந்து கொடுத்து, ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர். ஆனால், இந்த முறை சந்தீப் சாலியனுக்கு அவர் கொடுத்த மயக்க மருந்தின் அளவு (Dosage) அதிகமாக இருந்ததால், அதுவே அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிட்டது” என்றார். லாட்ஜில் சாதாரண திருட்டு வழக்காகத் தொடங்கப்பட்ட இந்த விவகாரம், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அக்ஷதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நான் கீழே குதிக்கப் போறேன்…” நள்ளிரவில் காதலனுக்கு வந்த கடைசி கால்… சென்னை ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதி மாடியில் இருந்து குதித்து, 22 வயது இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து…

32 seconds ago

“திமுக-விற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. முதல்வர் விஜய் கையில் இருக்கும் அந்த ’16 துறை’ ரகசிய பட்டியல்…. சட்டசபையில் வெடிக்கப்போகும் பாம்….!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது "கட்சி நிதி" விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.…

2 minutes ago

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

7 minutes ago

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

10 minutes ago

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

16 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

16 minutes ago