“திமுக-விற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. முதல்வர் விஜய் கையில் இருக்கும் அந்த ’16 துறை’ ரகசிய பட்டியல்…. சட்டசபையில் வெடிக்கப்போகும் பாம்….!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது “கட்சி நிதி” விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த கூட்டத்தொடரில், “நாங்கள் காசு கொடுத்து வாக்கு வாங்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்; கோயில் பணத்தையோ, கனிம வளங்களையோ கொள்ளையடித்து கட்சி நிதி சேர்க்க வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை” என்று முதல்வர் விஜய் அதிரடியாகப் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், இந்த விவகாரத்தை அத்தோடு விட்டுவிடாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முதல்வர் விஜய் திட்டமிட்டு வருகிறார்.

சினிமாவில் இருந்து நேரடியாக வந்து முதல்வர் ஆகிவிட்டதாக விமர்சிப்பவர்களுக்கு, “இது ரீல் அல்ல, ரியல்” என்று பதிலடி கொடுத்த விஜய், தவெக ஆட்சி ஒட்டுமொத்த தமிழக குடும்பங்களுக்கானது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கும், ஆவேசங்களுக்கும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்க அவர் தயாராகி வருகிறார். குறிப்பாக, திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘பார்ட்டி ஃபண்ட்’ முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்ட முதல்வர் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்காக, கோட்டை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் சில ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் எந்தெந்த துறைகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது, எவ்வளவு தொகை, யாரிடமிருந்து வாங்கப்பட்டு யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது போன்ற முழு விவரங்களையும் திரட்டுமாறு தனது செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில், சுமார் 16 முக்கிய அரசுத் துறைகளில் இந்த கட்சி நிதி வசூல் சங்கிலித் தொடராக நடந்துள்ளது கண்டறியப்பட்டு, அதற்கான பட்டியலையும் முதல்வரின் செயலாளர்கள் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. திரட்டப்படும் இந்த அத்தனை ஆதாரங்களையும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, எதிர்க்கட்சிகளுக்குப் பேரதிர்ச்சி கொடுக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கத்தை விடவும் கூடுதல் அரசியல் நெருப்புடன் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

25 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

33 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

37 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

47 minutes ago