“மக்களுக்குத் தண்ணி கூட கொடுக்கல.. விஜய் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்”…. கரூரில் நடந்தது என்ன?… போட்டுடைத்த பாஜக தலைவர்…. பரபரப்பு…!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். பழைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் நடமாட்டம், நாள்தோறும் அரங்கேறும் படுகொலைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எனத் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே இந்த அரசு குறியாக இருப்பதாகக் கேள்வி எழுப்பிய அவர், இதனால்தான் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளித்ததாக விளக்கமளித்தார்.

குறிப்பாக, கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய நயினார் நாகேந்திரன், அன்றைய தினம் முதலமைச்சர் விஜய் கரூருக்குப் பகல் 12:00 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு, இரவு 7 மணிக்குத்தான் வந்தார் என்றார். இந்தத் தாமதம் மற்றும் அலட்சியத்தின் காரணமாக, கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய்யும் ஒரு காரணமாகவே இருப்பார் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார். மக்களை நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, அவர்களுக்குக் குறைந்தபட்சம் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காத அவல நிலை அங்கு நிலவியதாக அவர் சாடினார்.

மேலும், கரூரில் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்த பிறகும், அங்கிருந்த பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறாமல் முதலமைச்சர் விஜய் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக எந்த விசாரணையும் செய்யாமல், சென்னைக்குச் சென்ற பிறகு இறந்தவர்களின் உறவினர்களை மட்டும் நேரில் அழைத்து பேசியதன் பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த அரசுக்கு, தங்களை எதிர்த்துக் கேள்வி கேட்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

Nanthini

Recent Posts

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

2 minutes ago

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

5 minutes ago

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

11 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

11 minutes ago

“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…

16 minutes ago

மேட்ச் நடுவே விழுந்த புறா எச்சம், ஓடி வந்த குரங்கு… உலகமே சிரித்த சம்பவத்திற்கு ஹிமந்தா கொடுத்த மாஸ் ரிப்ளை…!

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…

20 minutes ago