தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஜனநாயக்கன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் என்னவென்றால் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் இந்தப் படம் தான் அவருடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்தப் படத்தை முடித்த கையோடு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் இடையில் படப்பிடிப்பிலும் கலந்து கொள்கின்றார். விக்கிரவாண்டியில் தன்னுடைய முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் கூட்டிய நிலையில் அடுத்தடுத்து பல கூட்டங்களையும் நடத்தி வருகின்றார். விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ள நிலையில் மற்ற அரசியல் தலைவர்களையும் விஜய் விமர்சித்து வருகின்றார்.
இப்படியான நிலையில் நடிகர் விஜய் குறித்து பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே கர்நாடகா அரசியலில் தனக்கான முத்திரையை பதித்து வரும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக பல கருத்துக்களை தைரியமாக பேசியும் வருகின்றார். அதில் விஜய் மற்றும் பவன் கல்யாண் இருவருமே நடிகர்கள் என்பதால் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். இதைத் தாண்டி இவர்களிடம் தெளிவான அரசியல் பார்வை எதுவும் இல்லை.
மேலும் ஒரு பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் இவர்களிடம் தெளிவாக இல்லை என்று தெரிகிறது. தனக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து அரசியல் களம் காண்கின்றனர். அரசியலைப் பற்றி முழுமையான தெளிவு எதுவும். இந்த இருபது வருடங்களில் இவர்கள் இருவருடனும் நான் அரசியல் பற்றி ஒரு தீவிரமான விவாதம் கூட செய்ததில்லை. ரசிகர்களை வைத்துக்கொண்டு அரசியல் பற்றி தெளிவான சிந்தனை எதுவும் இல்லாமல் அரசியலில் இருவரும் இணைந்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் அதில் பேசியுள்ளார். விஜய் பற்றி பிரகாஷ்ராஜ் இப்படி தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…