Connect with us

CINEMA

‘தசாவதாரம் நாயகன்’ இவர் தான்.. கமலுக்கு முன்பே 10 வேடங்களில் நடித்து அசத்திய மாபெரும் நடிகர்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்று கொண்டாடப்படுகிறார். இவருடைய திரைப்படங்கள் பல  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ‘தசாவதாரம்’ என்ற திரைப்படத்தில் 10 வேடங்கள் ஏற்று இவர் நடித்து அசத்தியிருப்பார். இத்திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் வாரி குவித்தது.

   

தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடிகர் கமலஹாசன் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு முன்பே 10 வேடத்தில் நடித்திருக்கும் ஒரு பழங்கால நடிகரை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் பி யு சின்னப்பா அவர்கள் தான். இவர் 70 முதல் 80 காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களில் முதன்முதலாக இரட்டைவேடங்களில் நடித்தவர்.

இவர் நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தில்  2 வேடங்களை ஏற்று நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து வெளியான ‘மங்கையர்கரசி’ என்னும் திரைப்படத்தில் 3 வேடங்களை ஏற்று நடித்தார். 1965 இல் வெளிவந்த ‘திருவிளையாடல்’ படத்தில் வரும் ‘பாட்டும் நானே’ என்ற பாடலை பாடிய சிவாஜிக்கு முன்னோடியாக ‘ஜகதல பிரதாபன்’ என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் 5 வேடங்களில் நடித்து அசத்தியவர்.

9 வேடங்களில் சிறப்பாக நடித்த நடிகர் திலகம் சிவாஜிக்கும், தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் தோன்றிய கமலஹாசனுக்கு முன்னோடியாக, ‘ஆரியமாலா’ என்ற படத்தில் 10 வேடங்களில்  நடித்த பி யு சின்னப்பா அவர்களை ஒரு சாதாரண நடிகர் என்று சொல்லி நிறுத்தி விட முடியாது. அவர் ஒரு பிறவி நடிகர். 70 80 ஆண்டுகளுக்கு முன்பே 10 வருடங்களில் அசால்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் பி யு சின்னப்பாவை இந்த தொகுப்பின் மூலம் நாம் நினைவுகூர்ந்து பார்ப்போம்.

Continue Reading

More in CINEMA

To Top