நடிகர் சங்க கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்… இனி சீக்கிரம் திறப்பு விழா தான்…

By Begam on ஏப்ரல் 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் என்று கூட சொல்லலாம். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் சமீபகாலமாக மீண்டும் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடித்து வருகிறார். முத்துராமலிங்கம், சீமராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டார் நெப்போலியன். ஆனால் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்பொழுது இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் தனது கவனத்தை முழுவதுமாக செலுத்தி வருகிறார்.

   

 

தற்பொழுது இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.  விவசாயமும் செய்து வருகிறார். அவருக்கு தனுஷ், குனால் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் மூத்தவரான தனுஷ் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். தனது மகனுக்கு அங்கேயே மருத்துவம் பார்த்துக் கொண்டும், திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் வருடக்கணக்கில் முடிவு பெறாமல் இருக்கும் நடிகர் சங்க கட்டடப் பணிக்காக ரூ.1 கோடி  நிதி உதவி உதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு நடிகர் சங்கம் அவருக்கு மனதார நன்றியும் தெரிவித்துள்ளது. இதோ அந்த அறிக்கை…