Connect with us

CINEMA

குழந்தையாக மாறி சேட்டை செய்த நடிகர் கமலஹாசன்… ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கியூட் ரீல்ஸ் வீடியோ வைரல்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் .அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன்.

   

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் தான் விக்ரம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அள்ளிய இப்படம் 450 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராமலிங்கம் என  பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் 1986ம் ஆண்டு நடித்த விக்ரம் படத்தில் இளையராஜா இசையில், தனது சொந்த குரலில் பாடிய பாடல் ‘விக்ரம்… விக்ரம்’ என்ற பாடல்.

பயங்கர பிரபலமான இந்த தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் பயன்படுத்தியிருந்தார் அனிருத். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது மகளான ஸ்ருதிஹாசன், ரீல்ஸ் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் விக்ரம் பட தீம் மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அதனை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

இதில் இறுதியாக கமல்ஹாசன் எண்ட்ரி கொடுத்து விக்ரம் என கத்துகிறார். இந்த கியூட் வீடியோவில் கமல்ஹாசன் குழந்தையாக மாறி சேட்டை செய்கிறார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

Continue Reading

More in CINEMA

To Top