Categories: சினிமா

என் வாழ்க்கையை திருப்பி போட்டதே ஷகிலா தான்.. மேடையில் எமோஷனலாக பேசிய நடிகர் இளவரசு..!

Spread the love

தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் தான் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை மற்றும் கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார். இதுவரை 13 படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய இளவரசு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். முத்துக்கு முத்தாக மற்றும் மாயாண்டி குடும்பத்தார் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக விமல் நடித்த களவாணி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமாவில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இறுதியாக திருமாணிக்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய இளவரசு சகிலா பற்றி பெருமையாக பேசி உள்ளார். அதில், என் வாழ்க்கையில் நான் பெருமையாக சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் எனக்கு சகிலாவுடன் கிடைத்த நட்பு மட்டும்தான். இவர் ஒரு கவர்ச்சி நடிகை என்று பலரும் பல விதமான விமர்சனங்களை கூறினாலும் அனைத்திற்கும் கோபம் இல்லாமல் பதிலளிக்க கூடியவர்.

ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இவரும் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு வந்திருப்பார். பலமுறை நானும் இவரும் ரயிலில் ஒன்றாக பயணம் செய்துள்ளோம். இவருடன் பேசிக் கொண்டிருந்தால் ஏறுன இடமும் தெரியாது இறங்கப் போற இடமும் எவ்வளவு சீக்கிரம் வரப்போகிறது என தெரியாது. உண்மையிலேயே என்னுடைய மனைவி மற்றும் அம்மா பற்றிய நான் நன்றாக புரிந்து கொண்டதற்கு முக்கிய காரணமே சகிலாவுடன் பேசியது தான். எல்லோருக்கும் ஒரு இமேஜ் இருக்கும்.

நாம ஏதாவது பேசினா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று நினைப்போம். ஆனால் நீ என்ன வேணாலும் பேசிக்கோ, நான் இப்படித்தான் என்று இருக்கக்கூடியவர் தான் சகிலா. எதற்கும் அஞ்சாமல் தன்னிடம் இருப்பதை வெளிப்படையாக பேசி யாரிடமும் கோபப்படாமல் அப்படி ஒரு குணத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இவருடன் பழகியதில் இருந்து என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் திருதியும் கொண்டேன் என இளவரசு ஷகிலா பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

17 minutes ago

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

9 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

9 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago