Connect with us

CINEMA

இந்த கியூட் குழந்தை இன்று ஒரு பிரபல நடிகர்…! யாருன்னு தெரியுதா…?

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான நடிகர் கெளதம் கார்த்திக்கின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிரூபிக்க போராடி வருகிறார்.

   

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலித்து வந்தார்.

இதைதொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது  திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது இவர்கள் இருவரும் காதல் பறவைகளாக வெளிநாட்டில் சுற்றி திரிகின்றனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் கெளதம் கார்த்திக்.  இவர் தற்பொழுது தனது சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் பகிர இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

author avatar
Continue Reading

More in CINEMA

To Top