Connect with us

CINEMA

30 ஆண்டுகளாக படுத்த படுக்கை…! சகிக்க முடியா வேதனைகளுடன் மரணமடைந்த ‘என் உயிர் தோழன்’ நடிகர்…!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகங்கள் என்றாலே தமிழ்திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள். கார்த்திக், பாண்டியன், ராதா, ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா உள்ளிட்டோரை சொல்லலாம். அதேபோல் அவருடைய உதவி இயக்குநர்களும் நடிப்பு, இயக்கத்தில் வெளுத்து வாங்கியவர்கள் தான். மணிவண்ணன், பாக்யராஜ், மனோ பாலா, சித்ரா லட்சுமணன், பொன் வண்ணன், சீமான் ஆகியோரே அதற்கு சிறந்த உதாரணம் .

   

அப்படித்தான் பாபு என்கிற உதவி இயக்குநரையும் தன்னுடைய என் உயிர் தோழன் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகம் செய்தார். படமும் நன்றாக போனது. அடுத்து பாபு விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி என்ற படத்தில் நடித்தார், அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது.

இதையடுத்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல திரைத்துறை பிரபலங்கள் இவருக்கு உதவி செய்தனர். 30 வருடங்களாக படுக்கையில் கிடந்த அவருக்கு அவரின் தாயார் பணிவிடைகளை செய்து வந்தார். அவருக்கும் 80 வயது ஆகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா நேரில் போய் அவரை பார்த்துவிட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இத்தகவலை அறிந்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top