தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். இவர்கிட்டத்திட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது என் மனைவி தான் என்று 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த சர்ச்சை மிகப் பெரிதாக வெடித்தது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஆர்ட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும் போது இத்திருமணம் தேவையா..? என ரசிகர்கள் பலவாறு கேள்விகள் எழுப்பினர்.
இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருவரும் திருமணம் முடிக்காமல் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் . இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்பொழுது பிரிந்து விட்டதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்திவிராஜ் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பப்லு பேசியிருப்பதாவது, ‘இவ்ளோ நாள் தப்பு பண்ணிட்டேன். ஷீத்தல் அந்த விஷயம் தேவையே இல்ல. நான் ஷீத்தலை பிரிந்துவிட்டேன் என்று நான் எங்கேயாவது கூறினேனா அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களாக நாங்கள் பிரிந்து விட்டோம் என்கிறீர்கள். நீங்களாக நாங்கள் சேர்ந்து விட்டோம் என்கிறீர்கள். என் வாழ்க்கையில் நான் நிறைய ஏமாந்துவிட்டேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள். இப்போது தான் எல்லாமே புரிகிறது” என்று விரக்தியாக பேசினார். “கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார். சினிமாவில் வாய்ப்பு, அழகு, நல்ல உடலை கொடுத்த கடவுள் வாழ்க்கையை இப்படி அலைய விட்டுவிட்டார்” என பப்லு விரக்தியாகப் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…