Categories: சினிமா

என்றும் மாறாத அதே சிக்ஸ் பேக்.. பிட்னஸ் சீக்ரெட் சொல்லும் நடிகர் அதர்வா.. இதுதான் காரணமா..?

Spread the love

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே அலறவிட்ட பிரபலமான நடிகர் தான் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா முரளி தன்னுடைய 21 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய முதல் படம் வெளியான சிறிது நாட்களிலேயே அவருடைய தந்தை முரளி காலமானார். இருந்தாலும் துவண்டு போகாத அதர்வா சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்தார். சினிமா துறையில் தனக்கென தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வளர்த்துக் கொண்டார்.

முதன் முதலில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பானா காத்தாடி என்ற காதல் நாடகத்தில் அதர்வா பள்ளி மாணவனாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சனங்கள் மற்றும் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் நேரடியான சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் காதலும் பல திருப்பங்களும் நிறைந்து இருந்தது

இந்த படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடிய நிலையில் படத்தில் அதர்வாவின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. தொடர்ந்து பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் ஒரு அப்பாவியாக அடிமை வேடத்தில் அதர்வா நடித்திருந்தார். தன்னுடைய அழகான தோற்றத்தை படத்தின் கதாபாத்திரத்திற்காக அடியோடு மாற்றிக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் தான் அதர்வாவின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். இதனைத் தொடர்ந்து ஈட்டி திரைப்படத்தில் ஒரு தடகள வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்த அதர்வா 100 என்ற அதிரடி திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக கலக்கியிருந்தார்.

இதனைத் தவிர இரும்பு குதிரை, சண்டிவீரன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் என ஏராளமான திரைப்படங்களில் அதர்வா நடித்துள்ளார். இறுதியாக இவர் டி என் ஏ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இவர் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் அதர்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் என்ன பொறுத்த வரைக்கும் நான் ஏதாவது முடிவு பண்ணிட்டா அத செய்தே தீருவேன். இவ்வளவு நாள் குள்ள இத செய்து முடிக்க வேண்டும் என்று நான் நினைச்சுட்டா அத கண்டிப்பா செய்து விடுவேன்.

ஒரு மாதம் படப்பிடிப்பு காரணமாக என்னால் சரியாக ஜிம் போக முடியவில்லை என்றால் திரும்பவும் முதலில் இருந்து பண்ண வேண்டியதாக இருக்கும். அதனால் எனக்காக என்ன வேலை இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரம் தனியா டைம் ஸ்பென்ட் பண்ணுவேன். அந்த டைம்ல ஜிம் போக வேண்டும் என்று அவசியமில்லை. எனக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும் என்பதால் டென்னிஸ் விளையாடுவேன், பேட்மிட்டன் மற்றும் பிக்கில் பால் என எனக்கு தோன்றியதை நான் செய்து கொண்டிருப்பேன். ஆனா தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது எனக்காக நாம் பண்ணிடுவேன். அதனாலதான் எப்பவும் நான் ஒரே மாதிரியே இருக்கேன் என்று அதர்வா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

48 minutes ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

51 minutes ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

54 minutes ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

1 மணத்தியாலம் ago

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

1 மணத்தியாலம் ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

1 மணத்தியாலம் ago