விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருப்பரங்குன்றத்தில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செல்பி எடுப்பதற்காக நெற்றியில் இருந்து திருநீற்றை அழித்ததற்கு ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. மதுரையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “நெற்றியில் வைத்த திருநீற்றை கோயில் வளாகத்தில் வேண்டும் என்றே அளித்தது முருகன் கடவுளை இழிவு படுத்துவதாக உள்ளது. திருநீறு ஏன் அளித்தீர்கள் என்று அவரிடம் கேட்டால் ஆறு மணி நேரமாக நெற்றியில் இருந்தது. அதனால் தான் அதை அழித்தேன் என்று தவறான விளக்கம் கொடுத்துள்ளார். கோயிலுக்குள் ஆறு மணி நேரமாகவா இருந்தார்.
பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது முருகனை தரிசிப்பது போல தரிசித்து விட்டு அதன் பிறகு திருநீறு அழித்துள்ளார். பிறகு சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவிற்கு சென்று விட்டு மலை விவகாரத்தை பற்றி பேச என்ன காரணம்? சனாதனத்தை ஒழிப்போம், மதசார்பின்மையை காப்போ,ம் கோயில் கோபுரத்தில் இருப்பதெல்லாம் ஆபாச பொம்மைகள், நாங்கள் கடவுளின் மறுப்பாளர்கள் ஈவெரா வாரிசு என்று மார்தட்டிக் கொண்டு இந்து மத நம்பிக்கைக்கும், சனாதன தர்மத்திற்கும் எதிராக பேசி வரும் திருமாவளவனுக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் என்ன வேலை?” என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…
தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்…
தெற்கு டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் 45 வயது மகள்,…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை பகுதியில் உள்ள கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள்,…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்த…