இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதை அறிவித்தார்.இந்நிலையில் நாட்டின் 69ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதல்முறையாக தெலுங்கில் தேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமாரை கட்டி தழுவி கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் தன் மனைவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார். குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் நடிகர் அல்லு அர்ஜுன் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…
ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாகத் தவறு செய்யும் என்றும், எனவே நிர்வாகிகள் ஓராண்டு காலம்…
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரில், சுமார் 5.04 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சிறுவர்கள் சிலர்…
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்து புதிய வரலாற்று மாற்றத்தை…
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும்…