பாமக முன்னாள் MLA அருள்-க்கு தூது விட்ட தவெக…? தட்டிப்பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி…? விசுவாசத்தால் வந்த வினை…!!

Spread the love

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்து புதிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தேர்தலுக்கு முன்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு கட்சி இரண்டாகப் பிரிந்தது. அன்புமணி தலைமையிலான பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் அவரது மனைவி சௌமியா மட்டும் எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். மறுபுறம், சசிகலாவின் கட்சியுடன் கூட்டணி அமைத்த ராமதாஸ் அணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் இரு குழுக்களாகப் பிரிந்து தேர்தல் களத்தில் நின்றனர்.

இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், கடந்த வாரம் டாக்டர் ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியினரின் திருமண நாள் வந்தது. இதைப் பயன்படுத்தி அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் சென்று பெற்றோரிடம் ஆசி பெற்றார். அப்போது ராமதாஸ் தனது மகனைக் கட்டியணைத்துக் கண்ணீர் வடித்தார். இந்த நெகிழ்ச்சியான குடும்பச் சந்திப்பின் மூலம், பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஓராண்டாக நிலவி வந்த உட்கட்சிப் பிளவுகளுக்கும் மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

தலைவர்கள் இருவரும் திடீரென இணைந்தது, தேர்தலில் அவர்களுக்காக இரு பிரிவாகப் பிரிந்து நின்ற நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராமதாஸ் அணியில் தீவிரமாகச் செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ அருள், “தலைவர்கள் இருவரும் எங்களை ஏமாற்றிவிட்ட நல்ல நடிகர்கள்” என்று தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தான் பதவி வெறி பிடித்தவன் அல்ல என்றும், நினைத்திருந்தால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு இன்று அமைச்சராகி இருக்க முடியும் என்றும் கூறிய அவர், விசுவாசத்தை தொண்டர்களிடம் மட்டுமே பார்க்க முடியும், தலைவர்களிடம் பார்க்க முடியாது என்றும் சாடியுள்ளார்.

Swetha

Recent Posts

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

1 minute ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

2 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

6 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

8 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

10 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

14 minutes ago