சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரில், சுமார் 5.04 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சிறுவர்கள் சிலர் விளையாட்டாகச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான சிகப்பு நிற ‘ஃபெராரி 488 ஜிடிபி’ காரை, அப்பகுதியைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் சேர்ந்து பாழாக்கியுள்ளனர். காரின் உரிமையாளர் தனது பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, கார் சேதமடைந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுவர்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியைச் சறுக்கு பலகை போலப் பயன்படுத்தியும், கைகளில் மூங்கில் கம்புகளை வைத்தும் விளையாடியது தெரியவந்தது. இவர்களின் இந்த விபரீத விளையாட்டால் காரின் ஹுட், கூரை மற்றும் பம்பர் ஆகியவற்றில் கடுமையான கீறல்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஆடம்பர காரின் சேதங்களை முழுமையாகச் சரிசெய்யச் சுமார் 95 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களின் பெற்றோரோ வெறும் 4.75 லட்சம் ரூபாய் மட்டுமே தர முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினரின் முன்னிலையில் இருமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சிறுவர்களின் பெற்றோர் முழுமையான இழப்பீட்டை வழங்க மறுத்ததோடு, தவறு செய்த சிறுவர்களும் தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த காரின் உரிமையாளர், பேச்சுவார்த்தையைக் கைவிட்டு, முழு பழுதுபார்ப்புச் செலவையும் சட்டப்பூர்வமாக வசூலிப்பதற்காகச் சிறுவர்களின் பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…