தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் மஞ்சள்நீர்காயல் பகுதிகளில் திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப் பணிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசிடமும் சம்மந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனது படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைக்கவுமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்தார்.
அப்போது தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த கனிமொழி, காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, ஆளுங்கட்சியான தவெகவின் ஐ.டி விங்கைப்போல தமக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாகக் சாடினார். குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்குப் பதில் கூறுவது வேடிக்கையாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதில் அரசு காட்டுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழக முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு மட்டுமே வாயைத் திறப்பதாகவும், சட்டமன்றத்திலோ அல்லது பொதுவெளியிலோ எதற்கும் முறையான விளக்கம் தராதவர் என்றும், பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் தயங்கும் முதலமைச்சராக அவர் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தவெக தங்களது சாதனைகளைப் போல ரீல்ஸ் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், நாளாந்தத் தேவைக்கு 3.8 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது வெறும் 1.1 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்தக் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கி, பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இந்த விரிவான குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…