தேசிய விருது அறிவித்த நொடி மனைவியை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட நடிகர் அல்லு அர்ஜுன்… வைரலாகும் எமோஷனல் வீடியோ…

By Begam on ஆவணி 25, 2023

Spread the love

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

   

அதன்படி நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திரைக்கலைஞர்களுக்கு தேசிய  விருதை அறிவித்தார்.இந்நிலையில் நாட்டின் 69ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

 

இதன் மூலம் முதல்முறையாக தெலுங்கில் தேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமாரை கட்டி தழுவி கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் தன் மனைவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார். குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் நடிகர் அல்லு அர்ஜுன் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gulte Official (@gulteofficial)