Connect with us

CINEMA

‘இங்க வந்து உட்காருங்கம்மா’… நின்று கொண்டிருந்த ரசிகைகளை உட்காரச் செய்த நடிகர் அஜித்.. தல எப்பவும் கிரேட் தான்..  வீடியோ வைரல்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’  திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. லைக்கா  தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும்  இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

தற்பொழுது அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததும், தற்பொழுது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது கட்ட ஷூட்டிங் 70 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இவர் மட்டுமின்றி ஆக்சன் கிங் அர்ஜுன்,  ஆரவ், ரெஜினா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பிரபலங்களை அவரது ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போது பார்ப்போம் என்று ஆவலாக காத்துக் கிடந்து பார்க்க செல்வார்கள்.

அப்படித்தான் நடிகர் அஜித்தை பார்க்க வெளிநாட்டு ரசிகர்களும், ரசிகைகளும் தற்பொழுது அஜர்பைஜானுக்கு படையெடுத்து வருகின்றார்களாம். தற்பொழுது விட முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பார்க்க வந்த சில ரசிகைகளை அவர் ப்ளீஸ் உட்காருங்க என்று கூறி அமரச் செய்து பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த தல ரசிகர்கள் தல எப்பவுமே கிரேட் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top