கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே இன்று திமுக வேட்பாளர் தளபதி முருகேசனின் தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான கட்சித் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர் ஒருவர் மீது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் அவரது வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதமாக நசுங்கி, அவர் படுகாயமடைந்தார்.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த திமுகவினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…