“ரஜினி சொல்லி முடித்த சில நிமிடம்… விஜய்யின் பின்னால் சென்ற இளைஞர் பலி… தவெக-வின் தேர்தல் பிரச்சாரத்தில் தொடரும் சோகம்… ஸ்தம்பித்த தமிழக அரசியல்…!!!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், விஜய் தமிழகம் முழுவதும் தீவிரமான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 8-ம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரப்புரை செய்ய அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து திருநெல்வேலி கேடிசி நகர் பகுதிக்கு விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றபோது, அவரைக் காண ஆர்வத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஏழு இளைஞர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு இளைஞர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இளைஞர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியிருந்தார். நடிகர்களின் பின்னால் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்கிக் கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இளைஞர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; நேரத்தைத் தவறவிட்டால் வாழ்க்கை கஷ்டமாகும். உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதோடு, போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ரஜினிகாந்த் இவ்வாறு கூறி முடித்த சில நிமிடங்களிலேயே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்த தொண்டர்கள் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. தனது வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் எனத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும், விஜய் தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தங்கள் தலைவரை அருகில் பார்க்கும் ஆவலில் இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago