OAK சுந்தர் என்பவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு வில்லன் குணச்சித்திர நடிகர் ஆவார். இவரது தந்தை OAK தேவர் தமிழ் சினிமாவில் சிவாஜி எம்ஜிஆர் உடன் பல திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர். அதன் மூலம் தமிழ் சினிமாவில் OAK சுந்தருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1992 ஆம் ஆண்டு “நாடோடி பாட்டுக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் அவர்கள் விருமாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்தார். அதன் மூலம் பிரபலமான OAK சுந்தர் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மகாபாரதம் என்ற தொலைக்காட்சி தொடரில் பீஷ்மரின் கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்ததற்காக வெகுவாக பாராட்டப்பட்டவர்.
இது தவிர நான் அவன் இல்லை, வேல், வேங்கை, பூஜை, கிடாரி, சாமி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர மர்ம தேசம், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, பொம்மலாட்டம், மகாபாரதம், ரோமாபுரி பாண்டியன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் OAK சுந்தர்.
எந்த கதாபாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பவர் OAK சுந்தர். இவரை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இவர் ஒரு படத்திற்காக ஒசாமா பின்லேடன் போல் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது இந்திய ராணுவத்தினர் இவர் உண்மையிலேயே ஒசாமா பின்லேடன் தான் என்று கைது செய்து கூட்டி சென்றார்களாம். அதற்கு பிறகு விஷயம் தெரிந்து விடுவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு எந்த கதாபாத்திரமானாலும் இவருக்கு அப்படியே பொருந்தும். தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் OAK சுந்தர்.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…