தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளருமாக வளம் வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். தற்போது நடிப்பிலிருந்து விலகிய அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தமிழக துணை முதல்வராக இருந்து வரும் உதயநிதி சினிமாவிலிருந்து முற்றிலும் விலகி விட்டார். இருந்தாலும் அவரின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்ந்து பட தயாரிப்பிலும் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி தற்போது காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோரதன் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
வணக்கம் சென்னை என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் கிருத்திகா உதயநிதி. அதன்பிறகு விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் அவர் இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படியான நிலையில் கிருத்திகா உதயநிதி மற்றும் உதயநிதி இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர்.
முதலில் தன்னுடைய காதலை கிருத்திகாவிடம் உதயநிதி வெளிப்படுத்தும்போது அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். பிறகு அரசியலுக்குள் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கிருத்திகா கூறிய நிலையில் உதயநிதி வாக்குறுதி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் நுழைந்து நடிக்க மாட்டேன் எனவும் உதயநிதி சத்தியம் செய்து கொடுத்ததால் இவர்களின் திருமணம் நடந்தது. ஆனால் அந்த இரண்டு சத்தியத்தையும் உதயநிதி மீறிவிட்டதாக கிருத்திகா உதயநிதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கலகலப்பாக பேசியுள்ளார்.
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…