13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒடிசாவின் பாரம்பரிய கோவில்… கொனார்க் சூரிய கோவிலின் வரலாறு…

Spread the love

இந்தியாவின் மிகப் பழமையான பாரம்பரியமான கோவிலில் ஒன்று ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் அமைந்திருக்கும் சூரிய கோயிலாகும். இந்தியாவில் முதன் முதலில் சூரியனுக்காக அமைக்கப்பட்ட கோவில் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் சிவப்பு மண் பாறைகளாலும் கருப்பு நிற கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. மாமன்னர் கஜபதி நரசிங்க தேவாவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் முதலாம் நரசிங்க தேவரால் உருவாக்க பட்டிருக்கிறது.

இந்த சூரிய கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவத்துடன் சூரியன் அமைந்திருப்பது சிறப்பானதாகும். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது கவிதைகளில் இந்த கொனார்க் சூரிய கோவிலின் சிற்பங்களை பார்த்து வியந்து அதற்காகவே பிரத்தியேகமாக கவிதைகள் எழுதி இருக்கிறார். இந்த கோவிலை கட்டுவதற்கு நரசிம்ம தேவரின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌவுரவ மதத்தில் சூரிய பகவான் தான் முக்கிய கடவுளாக இருக்கிறார். அதன் பெயரிலேயே சூரிய பகவானுக்கு இந்த கோவில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. அது மட்டுமல்லாமல் நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் ஆகியவற்றை சிறப்பாக அமைத்திருக்கின்றனர். மன்னர் நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழு கோவிலும் இப்போது இல்லை. சில பகுதிகள் இடிந்து போய் அழிந்து இருக்கிறது. இக்கோவிலில் இருந்து உடைந்து விழுந்த சிற்பங்கள் மற்றும் முக்கிய பொருட்களை கொனார்க் ருங்காட்சியத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த சூரிய கோவிலை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பண்பாட்டுச் சின்னமாக 1984 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த சூரிய கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெறும் மகா சப்தமி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். இந்த கோனார் சூரிய கோவில் சந்திரபாகா என்னும் கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதால் இது ஒரு அற்புதமான சுற்றுலா தளமாக இந்தியாவில் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பழங்கால வேலைபாடுகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

admin

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

11 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

16 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

30 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

38 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

43 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

43 minutes ago