#image_title
சமீபத்தில் இந்தியாவே கலங்கிய சம்பவம் என்னவென்றால் அது Ratan Tata அவர்களின் மறைவு. டாட்டா குழுமத்தில் தலைவராக இருந்தார் Ratan Tata தொழிலதிபராக மட்டுமல்லாமல் மனிதநேயத்தின் மறு உருவமாக இருந்திருக்கிறார். மக்களுக்காக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து நீங்கா இடம் பிடித்தவர் Ratan Tata .
Ratan Tata மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே தொழிலதிபராக வேண்டும் என்ற முனைப்போடு இருந்து வெற்றிகரமாக டாட்டா குழுமத்தை உலகம் அறிந்த சாம்ராஜ்யமாக மாற்றி சாதித்திருக்கிறார். தற்போது Ratan Tata மறைந்ததற்கு பிறகு பார்சி முறையில் அவரது உடலை இயற்கைக்கு ஒப்படைப்பது என்று பேசப்பட்டது. பார்சி முறையில் உடலை என்ன செய்வார்கள் என்பதை பற்றி இனி காண்போம்.
பார்சி முறையில் ஒருவர் இறந்து விட்டால் டோக்மேனேஷினி அல்லது டவர் ஆப் சைலன்ஸ் முறையில் உடலை இயற்கை ஒப்படைத்து விடுவார்கள். அதாவது பார்சி முறையில் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது. அவர்கள் முறையில் நெருப்பும் பூமியும் புனித தன்மையுடையதாகவும் அதை நாம் இறந்த உடலை தகனம் அல்லது புதைப்பது மூலம் அதன் புனித தன்மையை கெடுத்து விடக்கூடாது என்று கூறுவார்.
அதேபோல பார்சி முறையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த மதத்தைச் சார்ந்த பெரியோர்கள் இறந்தவர் உடலுக்கு பூஜை செய்து பருத்தி துணையால் சுற்றி டவர் ஆப் சைலன்ஸ் எனப்படும் அதற்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வர். அங்கே நடுவே உயரமான மேடை போன்று இருக்கும் அதில் இறந்த உடலை வைத்துவிட்டு வந்துவிடுவார். அந்த இறந்த உடலானது பறவைகளுக்கு மற்றும் ஜீவராசிகளுக்கு உணவாகி விடும். இறுதியில் இருக்கும் எலும்பு துண்டுகள் இயற்கையால் அதுவே அழிந்து விடும். இதுதான் அவர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறையை அவர்கள் கடைபிடிக்க முடியவில்லை அதற்கு காரணம் கழுகு இனம் அழிந்து வருவது தான். இறந்தவர்களின் உடலை அதிகமாக உண்பது கழுகு தான். அதனால் அவர்களும் மின் மயானத்தை நாடி வரும் நிலைமை ஏற்பட்டு விட்டது. அதேபோல் Ratan Tata உடலும் பார்சிமுறையில் அடக்கம் செய்யப்படுகிறது என்று கூறி வந்த நிலையில் நடைமுறை சவால்களை கருத்தில் கொண்டு அவரை மின் மயானதில் தகனம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…