Connect with us
Director Aamir

CINEMA

அமீரை நம்ப வைத்தது ஏமாற்றிய சூர்யா குடும்பம் – படத்தை அம்போவென விட்டுச் சென்ற தயாரிப்பாளர் திரும்ப வந்தது அமீரை ஏமாற்றத்தானா?

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியை வைத்து 17 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் அமீர் இயக்கிய படம் பருத்திவீரன். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இவர் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருக்கட்டும் நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா உள்ளிட்ட குடும்பம்தான் சிபாரிசு செய்திருக்கிறது. ஆனால், பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய ஒரு மாதத்தில், கையில் பணமில்லை என வெளியேறிவிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

 Director Aamir

   

அதற்கு பின், தனது சொந்த படத்தயாரிப்பின் மூலம் பலரிடம் கடன்வாங்கி அமீர் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கிய படம்தான் பருத்திவீரன். இதற்காக 50, 60 பேரிடம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கி இருக்கிறார் அமீர். இப்படி பல பேரிடம் கடன்பட்டு பருத்திவீரன் படத்தை எடுத்து முடித்த நிலையில், நான் தயாரித்த படத்தை என்னிடமே கொடுத்துவிடுங்கள் என வந்து நின்றவர்தான் ஞானவேல்ராஜா. அப்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு பெரிய தொகை அமீருக்கு கொடுத்து உதவிய சசிக்குமாருக்கு மட்டும் மதுரை, ராமநாதபுரம் பகுதி தியேட்டர் உரிமயை வழங்கிய ஞானவேல் ராஜா, பருத்தி வீரன் படத்தை வெளியிட்டனர்.

 Director Aamir

படம் பெரிய அளவில் ஹிட்டான நிலையில், சேட்டிலைட், டிஜிட்டல் உரிமம், பிற மொழிகளில் படத்தை வெளியிட்டது என பல கோடி ரூபாய்களை இந்த படத்தின் மூலம் லாபம் பார்த்தனர். ஆனால், படத்தை தயாரித்த அமீருக்கு ஒரு ரூபாய் கூட திருப்பித் தராத நிலையில்தான், அமீர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய நஷ்டமடைந்த ஞானவேல் ராஜா, அதே காலகட்டத்தில் பருத்திவீரன் படத்தை எடுத்ததால், படத்தை தொடர்ந்து தயாரிக்க பணம் இல்லாமல், கால்வாசி படம் எடுத்த பிறகு காணாமல் போய்விட்டார்.

ஆனால் கார்த்தியின் எதிர்காலம், சிவக்குமார் தன் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, பலபேரிடம் கடன்பட்டு உழைத்த இந்த பருத்திவீரன் படத்தை உருவாக்கிய அமீரை, சூர்யா குடும்பமே ஏமாற்றிய இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்போது அதை இயக்குநர் சசிக்குமார், இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் ஞானவேல் ராஜாவுக்கு தெரிவித்த கண்டனத்தில் தெளிவாக கூறியுள்ளனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top