தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தாடி பாலாஜி. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருக்கின்றார். இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு போசிக்கா என்கின்ற மகள் இருக்கின்றாள். இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கும் கடந்த சில வருடங்களாக போலீஸ் கோர்ட் என்று பிரச்சனை இருக்கின்றது. இது சோசியல் மீடியாவிலும் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் இருவரும் போட்டியாளராக கலந்து கொண்டனர். பின்னர் கமலஹாசன் முன்னிலையில் இருவரும் சேர்ந்து விட்டதாக கூறப்பட்டது.
ஆனாலும் இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும் நித்தியா தனது மகள் போசிக்கா உடன் தனியாக வாழ்ந்து வருகின்றார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த தாடி பாலாஜி கடைசியாக குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் குக்காக போட்டி போட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி திருவள்ளூர் இளைஞர் அணி சார்பாக பொதுமக்களுக்கு விலையில்லா நீர்மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்குவதற்காக வருகை தந்திருக்கின்றார். விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக அவரை வரவேற்று போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த போஸ்டரில் 15வது நாள் கோடைக்கால வெப்பம் தணிக்க, பொதுமக்களுக்கு தினம் தோறும் தளபதி விலையில்லா இளநீர், மோர், பழங்களை வழங்க வருகை தந்திருக்கும் அன்பு அண்ணன் தாடி பாலாஜி அவர்களை வரவேற்கிறோம் என்று கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். இதனை தாடி பாலாஜி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.