ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் ஒருவர் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ஏரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5-ஆம் தேதி தணிகைபோளூர் ஏரியில் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் சடலத்தை அரக்கோணம் தாலூகா போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பி.டி.புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான டீ மாஸ்டர் ஹேமநாதன் (எ) சின்னா என்பது தெரியவந்தது.
காவல்துறையினரின் ஆழமான விசாரணையில், இந்த கொடூர கொலைக்கு பின்னணியில் கள்ளக்காதல் விவகாரம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சங்கர் (39), அவரது மனைவி கவிதா (35) ஆகியோருடன் ஹேமநாதனும் கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது கவிதாவிற்கும் ஹேமநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இவர்களது வீட்டிற்கு ஹேமநாதனும், அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட்டும் (33) அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதனையறிந்த கணவர் சங்கர், “உன்னை நம்பினேன்.. இனிமேல் என் வீட்டுப்பக்கம் வராத” என்று கூறி ஹேமநாதனைக் கண்டித்துள்ளார். இதற்கிடையே, ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட்டுக்கும் கவிதா மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு ஹேமநாதன் மீண்டும் கவிதாவின் வீட்டிற்குச் சென்று எல்லையை மீறி அதிகளவில் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர், அன்று இரவே ஹேமநாதனை சமாதானம் செய்வது போல் பேசி, ஆனஸ்ட்டின் ஆட்டோவில் அவரை ஏற்றிச் சென்றுள்ளார். தணிகைபோளூர் ஏரிக்கரைக்குச் சென்றதும், அங்கு வைத்து உருட்டுக்கட்டை மற்றும் கத்தியால் ஹேமநாதனை பலமாகத் தாக்கி, அடையாளம் தெரியாதவாறு முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை ஏரியில் வீசி தப்பியோடியுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் கொலையாளி சங்கர், அவரது மனைவி கவிதா மற்றும் ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ஆகிய மூவரையும் அரக்கோணம் தாலூகா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு அவர்கள் பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில், தாயின் கணவருடனான கள்ளக்காதலன்/வாழ்க்கைத் துணையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி…
உத்தரப் பிரதேசத்தின் ஹர்டோய் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில், 32 வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
இது போன்று சமூக ஊடகப் பக்கங்களில் அல்லது இணையத்தில் நாம் காணும் சுயவிவரக் குறிப்புகளும் விளம்பரங்களும், சமூகத்திற்குச் சேவையாற்றும் சிறந்த…
செங்கடலில் சவூதி அரேபிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாகக் கூறி, 'என்சீலியா' மற்றும் 'லைலா'…
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்…
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண்…