ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவெக நிர்வாகிகள் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகளான பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எம்எல்ஏ-வின் பெயரைச் சொல்லி கட்சியின் முக்கிய பிரமுகர்களே இப்படி ஒரு குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது, தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்தக் கடுமையான பாலியல் வன்கொடுமை புகாரை ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதும், தனது கட்சியின் மீதும் திட்டமிட்டு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலரது தூண்டுதலின் பேரிலேயே இந்தப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், தவெக ஆட்சியில் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும், தவறிழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…
மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளராகப் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு…
டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்த தேவஸ்மிதா பால் (35), கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவில்…