“தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”.. முத்தரசன் உடைத்த அண்டர்கிரவுண்ட் உண்மை..!!

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளராகப் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை வந்த அவர், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அதில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) முதல் எம்பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தப் பதிவு, கூட்டணியில் தங்களைக் குறிப்பிட்டிருந்த சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகளை கடும் கொந்தளிப்படையச் செய்தது. இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், “தங்களுக்குக் கூட்டணியின் பெயரையும், அதில் தங்களையும் சேர்க்க யாருக்கு அதிகாரம் கொடுத்தது?” என்று கேள்வி எழுப்பினார்.எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக-விற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்ததாகவும், தவெக சார்பில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக யாரும் தங்களை அணுகவில்லை என்றும், தாங்கள் இன்னமும் திமுக கூட்டணியில்தான் தொடர்வதாகவும் அவர் ஆணித்தரமாக விளக்கமளித்தார்.

இந்த அரசியல் மோதலைத் தொடர்ந்து, சென்னை வந்த பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், கூட்டணியில் இடதுசாரிகளின் பெயரைச் சேர்த்தது தவறு என்றும், தனது எக்ஸ் பதிவு பிழையானதுதான் என்பதைப் பிரவீன் சக்கரவர்த்தி நேரில் ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்தார். இந்த அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்களால் தவெக – காங்கிரஸ் கூட்டணி அரசியல் ரீதியாகத் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

Muthu Mani

Recent Posts

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

4 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

11 minutes ago

“‘யாருக்கு அனுமதி கொடுத்தீங்க?’.. துறவிகள் வேடத்தில் வந்து இளம் தம்பதியை துரத்தி துரத்தி அடித்த கும்பல்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…

13 minutes ago

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு!.. காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் CCTV வீடியோ.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…

23 minutes ago

“அதிமுக கூடாரமே காலி?”… விஜய்யின் ‘ஆபரேஷன் பனையூர்’ – சிக்கிய 5 முக்கிய முதலைகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…

26 minutes ago

எம்.ஜி.ஆர் வழியில் CM விஜய்… இனி இவங்களுக்கு கல்தா?… தமிழக அரசியலை உலுக்கும் தளபதியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…. மிரண்டு போன திமுக பிரமுகர்கள்….!

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…

30 minutes ago