டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்த தேவஸ்மிதா பால் (35), கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவில் உள்ள சத்யம் அபார்ட்மெண்ட்ஸில் வசித்து வந்தார். ஜூன் 4, வியாழக்கிழமை அன்று அவர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது சகோதரி தேவராதி பால், தேவஸ்மிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் இந்தக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முதற்கட்ட விசாரணையில், தேவஸ்மிதா ஜூன் 3 ஆம் தேதியே தலைப்பகுதியில் பலத்த காயத்துடனும், கையின் நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்தக் கொலை நடந்ததாகக் கருதப்படும் ஜூன் 3 ஆம் தேதி மதியம் 3:20 மணியளவில், ஒரு தனியார் வாடகை காரில் ஒரு ஆணும் பெண்ணும் முகமூடி அணிந்தபடி கைகளில் பைகளுடன் தேவஸ்மிதாவின் குடியிருப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் வழியாக தேவஸ்மிதாவின் வீட்டிற்குச் சென்று, சரியாக 30 நிமிடங்கள் கழித்து வேறு உடைகளை மாற்றிக்கொண்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் உள்ளே சென்றபோது வீட்டின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், தேவஸ்மிதாவுக்கு நன்கு தெரிந்தவர்களே வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக, முகமூடி அணிந்த அந்த இருவரையும் ஏற்றி வந்த தனியார் காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரின் பயண விவரங்களைச் சேகரித்து, கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2017-ல் திருமணமான தேவஸ்மிதா, குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் என்பதும், அவரது கணவர் பெங்களூருவில் வசிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தேவஸ்மிதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…
தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…
தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…