தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தயக்கம் காட்டின. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தவெக வெளிப்படையாக அழைப்பு விடுத்தபோதிலும் எந்தக் கட்சியும் முன்வராததால், அக்கட்சி தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுடன் கூட்டணி அமைக்கப் பல கட்சிகள் ஆர்வம் காட்டின. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக தவெக கூட்டணிக்குள் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தவெகவின் இந்த அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், நாளை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், அதிமுகவின் டாப் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை நடைபெறும் இந்த இணைப்பு விழாவில் அதிமுகவின் முக்கிய முகங்களாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் பெஞ்சமின் ஆகிய ஐந்து முக்கியத் தலைவர்களும் நேராகப் பனையூர் அலுவலகத்திற்குச் சென்று விஜய்யைச் சந்தித்துத் தங்களைத் தவெகவில் இணைத்துக் கொள்ளவிருக்கின்றனர். இவர்களுடன் மாவட்ட அளவில் அதிமுகவின் தூண்களாகக் கருதப்பட்ட தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் சிவன் ஆகியோர் தலைமையில் மேலும் ஐந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக பக்கம் சாயவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…
கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…