வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் துலுக்கன்குட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், பயிர்களைக் காட்டுப்பன்றிகள் பாழாக்குவதைத் தடுப்பதற்காகத் தனது விவசாய நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். அப்பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், இவரது மகன் சுரேஷ் கால்நடைகளைப் பராமரித்து பால் வியாபாரம் செய்து வந்தார்.
அப்பகுதியில் பலத்த மழை பெய்து ஓய்ந்த பிறகு, நிலத்தில் இருந்த மின்வேலிக்கு அருகே கிடந்த கூடை ஒன்றை எடுக்க ரங்கநாதன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மின்வேலியில் பட்டதால், பலத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். அருகில் மாடு கறந்து கொண்டிருந்த மகன் சுரேஷ், தந்தையைக் காப்பாற்றும் நோக்கில் தென்னை மட்டையுடன் விரைந்து வந்து மீட்க முயன்றபோது, அவரது காலிலும் மின்கம்பி சிக்கியதால் அவரும் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
கண் முன்னே அடுத்தடுத்து தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு மற்றும் மேல்பட்டி காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகக் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று இத்துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நகரில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பெரியார் அறிவுலகம் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, அதன் கட்டுமானங்கள் முழுமையாக நிறைவடைந்தன. இந்நிலையில்,…
ஐதராபாத் மீர்பேட் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மருமகளை நபர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ம் தேதி…
தமிழக அரசியலில் நடைபெறவுள்ள 5 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் தங்களின்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதூன் பகுதியில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 25 வயது இளம் தாய், சிகிச்சை…
கொச்சியில் தனியார் பேருந்து மோதியதில் 29 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கேரளாவில் அதிகரித்து வரும் அதிவேக மற்றும்…