விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிறுமி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 35 வயதான பவானி என்பவர், கோனானூர் அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி நாமக்கல் அருகே சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோயிலில், வயதான தம்பதி ஒருவருடன் காணாமல் போன சிறுமி ஹேமலதாவைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இது குறித்து அவசர உதவி எண் 100-ஐத் தொடர்பு கொண்டு காவல் துறைக்குத் தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் பவானியிடம் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த விசாரணை என்ற பெயரில் போலீசார் எல்லை மீறி செயல்படுவதாக பவானி வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார். தான் பணிபுரியும் இடம் வரை சென்று தனது குடும்பப் பின்னணி, சொந்த வாழ்க்கை மற்றும் தன் ஒழுக்கம் குறித்து அநாவசியமாக விசாரித்து தமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக அவர் புலம்பியுள்ளார்.
“ஒரு சிறுமி காணாமல் போன செய்தி அறிந்து, மனிதாபிமான அடிப்படையில் தான் பார்த்ததை உண்மையாகவும் பொறுப்போடும் அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால், காவல் துறை நடத்தும் இந்த விசாரணை முறை எனக்கு மிகுந்த அவமானத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. எதற்காக இந்தத் தகவலைக் கூறினோம் என்று நினைக்கும் அளவுக்கு என்னை வருந்த வைத்துவிட்டார்கள்” என அங்கன்வாடி சமையலர் பவானி கண்ணீருடன் பேட்டியளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ரிசார்ட் ஒன்றில் 2022-இல் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் அங்கிதா பண்டாரியின் பெற்றோர், தங்களுக்கு நீதி…
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டிட விபத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பழைய டெல்லியின்…
கூகுள் நிறுவனம் தனது வொர்க்ஸ்பேஸ் பயனர்களுக்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் குரல் அடிப்படையிலான வசதிகளை அறிமுகப்படுத்தித் தொழில்நுட்ப…
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டாரப் பகுதியான நெடுங்குளம் சந்திப்பில், பட்டப்பகலில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் சென்று வரும் இடத்தில்…
மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி நகரில் உள்ள நாகசென் நகர் பகுதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மிதிவண்டியில்…
தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மினி டேங்க் பண்ட் பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்கள் மற்றும்…